உள்நாட்டு செய்தி
நீதிமன்ற கொலை தொடர்பாக மற்றுமொருவர் கைது..!

நீதிமன்ற வளாகத்தில் “கணேமுல்ல சஞ்சீவ” துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் நோக்கி தப்பிச் செல்ல பயன்படுத்திய வானின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவை ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி நேற்று (19) மாலை புத்தளம் பாலவிய பகுதியில் வானில் தப்பிச் செல்லும்போது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபராக இருந்தமை குறிப்பிடத்தக்கது