உள்நாட்டு செய்தி
இஸ்ரேல் செல்லும் 2,000 தாதியர்கள்!

2025 ஆம் ஆண்டில் 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , எதிர்வரும் 24 ஆம் திகதி தாதியர் பணிக்காகச் செல்லவுள்ள 17 தாதியர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.