உள்நாட்டு செய்தி
சிகரட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் இல்லை…!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுபான மற்றும் சிகரட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமையால் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கக் கூடும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.
எனவே வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் திகதி மதுபான வகைகள் லீற்றர் ஒன்றின் விலை 6 வீதத்தினாலும் சிகரட் வகைகளின் விலை 5 முதல் 10 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.