உள்நாட்டு செய்தி
வரவு செலவு திட்டம் பாரட்டத்தக்கது பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ….!

2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தை பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மிகவும் சரியான திட்டமிடல் என பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், தனியார் துறையுடன் இணைந்து ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்களை நிறுவுதல், கொழும்பு துறைமுகத்தில் இரண்டு முனையங்களை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் எண்ணெய் தொட்டிகளை மேம்படுத்துதல் போன்ற முடிவுகள் குறித்து தனநாத் பெர்னாண்டோ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
நிவாரண முயற்சிகளுக்காக 232 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வது, அரசாங்கத்தின் கவனம் சமூகப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பது பொருளாதாரத்தின் மீது தாங்க முடியாத சுமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவைகள் மற்றொரு முக்கிய நேர்மறையான அம்சம் சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முடிவுகள் இல்லாதது என்றும் தனநாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.