முக்கிய செய்தி
2025 இல் கல்விக்கான ஒதுக்கீடு திட்டங்கள்..!

மகாபொல புலமைப்பரிசில் 5,000 த்திலிருந்து 7,500 Rs. ஆக அதிகரிக்கப்படும்.
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை ரூ.24,250 லிருந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.
இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும். தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.அரச துறையில் 30ஆயிரம் வெற்றிடங்கள் நிரப்பப்படும். அதற்கென 10ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மீள்குடியேற்றத்திற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை ரூ.24,250 லிருந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.40,000 ஆக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க ரூ.15 பில்லியன் ஒதுக்கப்படும்.
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.7,500-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் அதே வேளையில், குறைந்த வருமானம் பெறும் மூத்த குடிமக்களுக்கான உதவித்தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.
அஸ்வேசும சலுகைகளுக்காக ரூ. 232.5 மில்லியன் ஒதுக்கப்படும்.வடக்கில் பாலங்கள் மற்றும் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களைப் புதுப்பிப்பதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.