உள்நாட்டு செய்தி
கொஹுவல நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பு..!

இன்று( 17)அதிகாலை பெண் ஒருவர் ஒட்டிச்சென்ற கார், மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்தது.
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. 28 வயது பெண் ஒருவரே காரை ஒட்டிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.