உள்நாட்டு செய்தி
3 மாதங்களில் நாடு பொருளாதார பின்னடைவு..!

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகத் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதும், நிபுணர்களின் இடம்பெயர்வு காரணமாக அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இழப்பதும் வணிகங்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
இது உற்பத்தித்திறனில் தொடர்ச்சியான சரிவுக்கு வழிவகுக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.