உள்நாட்டு செய்தி
பதுக்கல் கீரி சம்பா அரிசி பறிமுதல்..!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2021/09/rice-paki.jpg)
அதிக விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் கீரி சம்பாவை கொழும்பில் கிடங்கொன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
மேற்கு மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த அரிசி மற்றும் பொருட்களை மறைத்து வைத்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.