முக்கிய செய்தி
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கொழும்பு, பெப்ரவரி 16: 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.இதற்கமைய, நாளை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
விவாத காலக்கெடுவுகள்:
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்கள் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் நடைபெறும். ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21 மாலை 6:00 மணிக்கு நடத்தப்படும். இதனால், நாட்டின் பொருளாதார திசைதிருப்பம் தொடர்பாக எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன.