உள்நாட்டு செய்தி
கடவத்தையில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

கடவத்தை கணேமுல்ல அதிவேக வீதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (14) இரவு 8 மணியளவில் இந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் குறித்த நபர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்