உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை ..!

வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக வௌியாகும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை மத்திய வங்கி விடுத்துள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,இலங்கை மத்திய வங்கியில் நிலவும் எந்தவொரு வேலை வாய்ப்புக்களும் மூன்றாம் தரப்புத் தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படமாட்டாது.மத்திய வங்கியில் நிலவும் வெற்றிடங்கள் அல்லது வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவித்தல்களை வங்கி வௌியிடும்.இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ சமூக ஊடக வலைத்தளங்களில் மட்டுமே இதுபற்றி தகவல்கள் அறிவிக்கப்படும்.மத்திய வங்கியின் வேலைவாய்ப்புகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு வேறு எந்த நபரோ அல்லது வலைத்தளமோ அனுமதிக்கப்படவில்லை எனவும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.