உள்நாட்டு செய்தி
நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டதற்கு குரங்கு காரணமா?
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/05/powercut.jpg)
பாணந்துறை கிரிட் துணை மின் நிலையத்துடன் கூடிய மின் இணைப்பில் குரங்கு ஒன்று சிக்கியதாலே, நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் விநியோகத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.எனினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் அமைச்சரின் கூற்றை உறுதிப்படுத்தாமல் “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்தது. மறுசீரமைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன, மின் பணியாற்கள் கூடிய விரைவில் மின்சாரத்தை மீண்டும் விநியோக நிலைக்கு கொண்டு வர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை (CEB) இன்னும் உத்தியோகபூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை.