உள்நாட்டு செய்தி
ரயில்களில் மூன்றாம் வகுப்பு முன்பதிவு நிறுத்தம்

நாட்டில் குறிப்பிட்ட சில ரயில்களில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இடைநிறுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 5.55 மற்றும் 8.30 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கும் ரயில்களிலும் பிற்பகல் 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணிக்கும் ரயிலிலும் இவ்வாறு மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவுகளை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, இந்த ரயில்களில் மூன்றாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைப் பெட்டிகள் வழக்கமான மூன்றாம் வகுப்பு பெட்டிகளாக மாற்றப்படும்.இருப்பினும், மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.