உள்நாட்டு செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்யும் பிரேரணை…!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2022/07/1659103192-Sri-Lanka-Parliament-L.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு நாட்டின் வாக்காளர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.