உள்நாட்டு செய்தி
வாகனங்களின் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்..!
நாட்டில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பை காண முடியும் என இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெரேரா தெரிவித்துள்ளார்.அதற்கமைய, புதிய முச்சக்கர வண்டியின் விலை சுமார் 650,000 ரூபாயினால் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இறக்குமதி வாகனங்கள்புதிதாக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளின் விலை 700,000 ரூபாயாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அதிகளவான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.எனினும் இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.