உள்நாட்டு செய்தி
யோசித்த ராஜபக்ச துப்பாக்கிகளை ஒப்படைப்பு…!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச தம்மிடம் இருந்த, இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்ததாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அவரிடம் இருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கையர்களும் உள்ளடக்கம்துப்பாக்கிகள்யோசித்த ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடற்படை அதிகாரியாக செயற்பட்டார்.
இதன்போதே அவருக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.எனினும் அவர் பின்னர் கடற்படையில் இருந்து விலகியதுடன் இதற்கிடையில் காணி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது