உள்நாட்டு செய்தி
மாவை சேனாதிராஜா மரணம் இயற்கையானதல்ல!
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் அவரின் மரணம் இயற்கையானதல்ல என்றும் , அதற்குப் பின்னணியில் கொடூரமான உளவியல் அழுத்தம் உள்ளதாக வைத்திய நிபுணர்களும் , குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
கடுமையான மன அழுத்தம், அதிர்ச்சி அல்லது தாங்க முடியாத ஏக்கம், தலையின் முக்கிய நரம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் செயல்பாடு பாதிக்க காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
மாவையை தலைவர் பதவியில் இருந்து நீக்க காரணமானவர்களாக, மரணத்திற்கு முதல் நாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட CVK சிவஞானம், வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் செயல்கள் மாவையின் உயிரிழப்பிற்கு வழிவகுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
அதேவேளை மாவையை தமிழரசுக் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க சுமந்திரன் வழிகாட்டலில் சில முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சம்பவம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26 ஆம் திகதி அன்று அவரது வீட்டிற்கு CVK சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் சென்று, மாவையை கட்சியில் இருந்து விரட்ட திட்டமிட்டு கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் மாவை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் உறவினர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவையை தமிழரசுக் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க சுமந்திரன் வழிகாட்டலில் சில முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சம்பவம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது
. மாவையின் மரணத்திற்குப் பின்னணி 19 அரசியல்வாதிகள் தொடர்புடையதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.