உள்நாட்டு செய்தி
காலநிலை காரணமாக 92,471 பேர் பாதிப்பு!
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 320 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.