உள்நாட்டு செய்தி
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,650 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளனர்.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் நுளம்புகள் பரவும் விகிதம் அதிகரித்துள்ளது.இதன்காரணமாகவே டெங்கு நோய் தற்போது அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.