உள்நாட்டு செய்தி
முறைப்பாட்டுக்கு உதவ இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது..!
கிரிபாவ பொலிஸ் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று (24) பிற்பகல் 20000 ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கிரிபாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்புகார் வழங்கிய நபர், திருமணம் செய்து தற்போது மனைவியை விட்டு பிரிந்தவர்.
பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக அவர் அளித்துள்ள நஷ்டஈடு வழக்கு தொடர்பாக மனைவிக்கு எதிரான வாரண்ட்டை நிறைவேற்றவும், அந்த நபருக்கு உதவவும் இந்த லஞ்ச தொகை கோரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கமுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்லஞ்ச ஊழல் புகார்களை விசாரணை ஆணையம் விசாரிக்கிறது.