உள்நாட்டு செய்தி
புலமைப் பரிசில் பரீட்சை; மட்டக்களப்பு மாணவி வரலாற்று சாதனை!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதிபர் திருமதி.வனித்தா தியாகராஜா தெரிவித்தார் .
வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நேற்றுமாலை வெளியாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.