உள்நாட்டு செய்தி
மருந்துகளின் விலை தொடர்பில் புதிய கட்டுப்பாடு.!
மருந்து விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிய முறையின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றும்.புதிய விதிமுறைகளை விதித்து, மருந்துகளின் விலையை துறைமுகத்திலேயே முடிவு செய்யும்தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழு எவ்வாறு முறையாகச் செயற்படுகின்றது என்பதைக் கண்டறியும் அதிகாரம் வழங்கப்படுவதாகவும் கலாநிதி ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டார்.