முக்கிய செய்தி
இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்

அனைத்து பெண்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டி எழுப்புவதில் நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும் இந்த அரசாங்கத்தை கட்டி எழுப்ப பக்க பலமாக இருந்த பெண்களுக்கு நன்றி செலுத்தும் இதே வேளையில் கடந்த குறுகிய காலத்தில் இலங்கை பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளமை நினைவூட்ட விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம் உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் துணைப் பொருளின் கீழ் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதில் உள்ள அர்த்தம் மற்றும் நடைமுறை சாத்தியம். என்பவற்றையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.