உள்நாட்டு செய்தி
உச்சம் தொட்ட தங்கம் விலை…!
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் நகைப்பிரியகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செவ்வாய்கிழமையான நேற்று (21 ) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் 7,450க்கும், ஒரு சவரன் ரூ.59,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரே நாளில் எகிறியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ரூ.60,000-ஐ தங்கம் விலை தாண்டியது .
அதன்படி இன்று ஒரு கிராம் ரூ.75 அதிகரித்தது ரூ.7,525க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ. 60,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.6,205க்கும், ஒரு சவரன் ரூ.520 அதிகரித்து ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.