உள்நாட்டு செய்தி
சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு…!
சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.