உள்நாட்டு செய்தி
புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும்…!
வாகன சந்தை மீண்டும் திறக்கப்படும் போது எதிர்காலத்தில் கிடைக்கும் வெளிநாட்டு கையிருப்பின் அளவை கருத்தில் கொண்டு,
வாகனங்களை இறக்குமதி செய்வது பல கட்டங்களாக முறையாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும்,
வாகனங்களை இறக்குமதி செய்வது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதன் படி, வரி விகிதங்கள் அதிகரிப்புடன், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையும் உயரும் என கூறிய அவர் சில வாகனக்களின் விலைகள் குறையலா ம் எனவும் கூறினார்.