உள்நாட்டு செய்தி
கார் வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்ததில் 2 உயிரிழப்பு..!
கண்டியின் பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மைலாப்பிட்டிய பகுதியில் இன்று பகல் நிகழ்ந்த விபத்தில் 20 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தந்தை மற்றும் தாயுடன் பயணிக்கும் போது இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற தந்தை காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் கண்டி உடுதெனிய பகுதியை சேர்ந்தவர்களாகும்.