உள்நாட்டு செய்தி
குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து!
ரயில் சாரதிகளுக்கான பரீட்சை காரணமாக இன்று முற்பகல் வேளையில், சுமார் 15 குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பிரதான ரயில்களை இரத்து செய்யாமல் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் சாரதிகள் குழு ஒன்று செயல்திறன் பரீட்சைக்கு தோற்றியுள்ளமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜே. ஏ. யூ . கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.