Connect with us

முக்கிய செய்தி

20% மின்சார கட்டண குறைப்பு…!

Published

on

      

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் இன்று(17) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று(17.01.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தைப் பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது. 

அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி, ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை சமீபத்தில் அறிவித்தது.

ஆனால் மின்சார உற்பத்திச் செலவைக் குறைத்து, அதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தொடர்ந்து வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது