உலகம்
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ரொக்கெட்
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.
ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் ( gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

“ஸ்டார்ஷிப் ரொக்கெட் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம்” – என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு முகாமையாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.
ஃபிளைட் ரேடார் 24 (Flightradar24 ) தளத்தின் பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது குப்பைகள் விழுவதை தவிர்க்கவே பாதை மாற்றியமைக்கப்பட்டன