உள்நாட்டு செய்தி
சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இளைஞன் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை ஹேகித்த பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து 105 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (140 போத்தல்கள் ) கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்