உள்நாட்டு செய்தி
சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்.!
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த போது,
மின்சாரம் தாக்கி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த நபரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.