உலகம்
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு ஏற்பட்டுள்ளதுடன் அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நடுக்கம் மையம் கொண்டிருந்த மியாசாகி மாகாணம் மற்றும் தென்மேற்கு தீவான கியூஷு அதன் அருகிலுள்ள கொச்சி மாகாணத்திற்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் மதிப்பீட்டை 6.9 ஆகக் குறைத்து, அமெரிக்காவிற்கு “இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று அறிவித்துள்ளது