உள்நாட்டு செய்தி
முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான இந்திரதாச ஹெட்டியாராச்சி (99 வயது) இன்றையதினம் (12-01-2025) காலை காலமானார்.
இலங்கையின் மிகவும் வயதான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரதாச ஹெட்டியாராச்சியின் உடல் நாளை (13-01-2025) வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட்வுள்ளது.
இதனையடுத்து, 14 ஆம் திகதி ஹேனகம, பொகுன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, 15-01-2025 ஆம் திகதி பிற்பகல் பொகுன்விட்டவில் உள்ள கேந்திர மைதானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.