Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எச்சரிக்கை

Published

on

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி, இதுவரை செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1,042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் மேற்கண்ட பிரதிவாதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்