உள்நாட்டு செய்தி
பாணுக்குள் இருந்த லைட்டர்; வாடிக்கையாளர் அதிர்ச்சி!
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு இன்று காலை சென்றுள்ளார்.
இதன்போது, தந்தை தனது இரண்டு மகன்களுக்கும் பேக்கரியில் இருந்து இரண்டு மீன் பாண்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு மகன் மீன் பாணை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருப்பதை கண்டு தனது தந்தையிடம் அதனை காண்பித்துள்ளார்.
இதனையடுத்து தந்தை முறைப்பாடு வழங்குவதற்காக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள், குறித்த போக்கரி பாணந்துறை மாநகர சபைக்குட்பட்டது எனவும் இது தொடர்பில் பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் முறைப்பாடு வழங்குமாறும் தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.