உள்நாட்டு செய்தி
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை அறிமுகம்…!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-19.30.17_c6f69b82.jpg)
தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை எடுத்துள்ளது.
![](https://i0.wp.com/tm.lkpost.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-19.30.17_c71df488.jpg?resize=570%2C607&ssl=1)
தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வெயிலிலும் ,மழையிலும் தேயிலை பறித்து வருவதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளதோடு,தனது தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜே. ரொட்ரிகோ மற்றும் இணைப் பணிப்பாளர் வசந்த குணவர்தன ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் தனது தோட்டத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த குடையை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தியதாக தோட்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.