உள்நாட்டு செய்தி
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்!
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை நகரை வசிப்பிடமாக கொண்ட 27,30 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவர் நேற்று (05) இரவு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற வருட இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது விடுதிக்கு சென்றுகொண்டிருக்கும் போது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.