உள்நாட்டு செய்தி
யாழில் எலிக் காய்ச்சலால் இளைஞன் பலி…!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 23 வயதான இளைஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 5 நாட்களாக நோய் தீவிரமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வாழ்ந்த பகுதியில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் எலிக்காய்சலினால் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
அத்தோடு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தினை உட்கொள்ளவில்லை. அத்துடன் காய்சலுக்காக இரு வேறு பாமசியில் இரு தடவைகள் மருந்தினை எடுத்துள்ளார்.
அதாவது மருத்துவ ஆலோசனை இன்றி வைத்தியர்களின் சிபாரிசுகள் இன்றி மருந்துகளை எடுத்துள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.