உள்நாட்டு செய்தி
தவிர்க்கப்பட்ட மற்றுமொரு விமான விபத்து….!
தென்கொரியாவில் இன்று மீண்டுமொரு விமானவிபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று விபத்துக்குள்ளான ஜேசுஎயரின் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டதால் மீண்டும் புறப்பட்ட விமானநிலையத்திற்கே திரும்பி வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயிங் 737-800 என்ற விமானமே இன்று இவ்வாறு தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டுள்ளது – நேற்று இந்த 737-800 விமானமே விபத்துக்குள்ளானது.
சியோலின் கிம்போ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜெசுதீவிற்கு 6.37க்கு புறப்பட்ட விமானம் 7.25க்கு மீண்டும் கிம்போ விமானநிலையத்திற்கு திரும்பியது.
விமானத்தின் கண்காணிப்பு அமைப்பில் தரையிறங்கும் கியர்பிரச்சினை கண்டறியப்பட்டது என ஜெசு எயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
6.57 மணியளவில் விமானி தரைக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு இது குறித்து தெரியப்படுத்திய பிறகு மேலதிக நடவடிக்கைகளை எடுத்த பின்னர் தரையிறங்கும் கியர் வழமையான நிலைக்கு திரும்பியது என தெரிவித்துள்ள அதிகாரி எனினும் விமானத்தை முழுமையாக சோதனை செய்வதற்காக புறப்பட்ட இடத்திற்கே திரும்புவது என தீர்மானிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விமானம் மீண்டும் புறப்பட்டவேளை சுமார் 30 பயணிகள் பாதுகாப்பு காரணங்களிற்காக அந்த விமானத்தில் பயணிக்க மறுத்துள்ளனர்.