உள்நாட்டு செய்தி
ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிப்பு..!
அடுத்த ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதியத்தை வரும் 10ம் திகதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான ஓய்வூதியம் எதிர்வரும் 9ஆம் திகதி வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ம் திகதி மட்டும் பணம் செலுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.