உள்நாட்டு செய்தி
முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது.!
முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவ, ஒருகொடவத்த, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை, பொரளை ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கிரேண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 9 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றை தம்வசம் வைத்திருந்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.