Connect with us

உள்நாட்டு செய்தி

60 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக இரத்து !

Published

on

 

கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே தெரிவிக்கையில் ,

மருந்தகங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உரிமம் பெற்ற மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உரிமம் வழங்குவதற்கு முன் அனைத்துத் தேவைகளையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது ‘ என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *