உள்நாட்டு செய்தி
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு…!
தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அநேகமானவர்கள் நாட்டுக்குள் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துவதாகவும், தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் என்று உலகில் எங்குமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவில் விமான உற்பத்தி துறைக்கு நிகரான தர நிர்ணயங்கள் மிக்க ஓர் துறையே மருந்துப் பொருள் உற்பத்தி துறை என அவர் கூறியுள்ளார்.
யாரேனும் விநியோகஸ்தர்கள் இலங்கையில் பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கென விசேட நடைமுறைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.மருந்துப் பொருள் விநியோகஸ்தர்களை பலவந்தமான அடிப்படையில் பதிவு செய்து கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 150 – 200 மருந்துப்பொருட்கள் இல்லை என்ற கூறுவதனால் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு என அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அரச மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினால் திறந்த சந்தையின் ஊடாக அந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என டொக்டர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.