Connect with us

முக்கிய செய்தி

சுகாதார அமைச்சர் சீன மருத்துவமனை கப்பலுக்கு விஜயம்…!

Published

on

சீன மருத்துவமனை  இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார்.

சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

குறித்த கப்பல் இலங்கை மக்களுக்கு வழங்கும் இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சீன அரசாங்கத்தின் Mission Harmony – 2024 (மிஷன் ஹார்மனி – 2024) திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை வந்த இந்த மருத்துவமனை கப்பல், கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இன்று (27) வரை நாட்டில் தங்கியிருக்கும் இக்கப்பல் நாட்டு மக்களுக்கும் இந்நாட்டில் தங்கியுள்ள சீன மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கவுள்ளது.

இந்த வைத்தியசாலை கப்பலின் ஊடாக இலங்கை மற்றும் ஏனைய உலக மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை – சீனா இருதரப்பு உறவுகளை இலங்கையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் மேலும் பலப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக விவகாரங்களை மேம்படுத்துவதற்காக சீனக் குடியரசு நீண்டகாலமாக தலையீடு செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.