உள்நாட்டு செய்தி
நிதி மோசடி-இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதி நாடு திரும்பிய நிலையில் கைது.!
இலங்கையில் நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர்,
மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியே இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.