Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கும் சீனா!

Published

on

  இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீனா நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அதன்படி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் நாளைய தினம் (27) இடம்பெறவுள்ளது.

இந்த நிதியின் மூலம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,888 வீடுகளையும், கலைஞர்களுக்கு 108 வீடுகளையும் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.