உள்நாட்டு செய்தி
வேட்பாளர் பட்டியலை பொலிஸில் சமர்ப்பிக்க நடவடிக்கை…!
பொதுத் தேர்தலில் போட்டியிட்டதையடுத்து வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு பொலிஸிடம் வழங்க உள்ளது.
அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர்கள் மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.