உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் மாணவி உயிரை மாய்ப்பு!
மட்டக்களப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்