உள்நாட்டு செய்தி
15 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி பலி!
புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது 15 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் .
இந்த சிறுமி கலேவெவ விஜய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர்கள் வசித்த சிறிய வீட்டில் சரியாக உறங்க இடமின்றி தவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்கள், பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் சிறுமி தேங்காயின் ஒரு பகுதியை எடுத்து கறி செய்வதற்காக அரைக்க முயன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், கடையொன்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காயை சில நாட்கள் பாதுகாப்பதற்காக அரைக்கும் இயந்திரத்தில் வைத்து பொடியாக்கியது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சிறுமி தேங்காய் துண்டுகளை பொடியாக்க பயன்படுத்திய அரைக்கும் இயந்திரம் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.
அரைக்கும் இயந்திரத்தில் மேலும் இரண்டு கம்பிகள் பொருத்தப்பட்டு அதனை மின் செருகியில் பொருத்த சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.